நாட்டுசக்கரையா? அல்லது தேனா?: இரண்டில் எது சிறந்தது தெரியுமா?
பொதுவாகவே இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடித்தமானதொன்றுதான். எந்த பொருளை எடுத்தாலும் அதில் கொஞ்சம் இனிப்பும் கலந்து தான் இருக்கும்.
சர்க்கரை என்பது ஜீனி, இனிப்பு பண்டங்கள், பழச்சாறுகள், கார்பனேடட் பானங்கள் வாயிலாக அதிகமாக நம் உடலுக்கு செல்கிறது. நாம் தினமும் சக்கரையை பயன்படுத்தாமல் இருந்தது இல்லை. தினமும் டீ அல்லது காபி குடிப்போம். இல்லையென்றால் எதாவது இனிப்புக்களை சாப்பிடும் போது கூட அதில் சக்கரை இல்லாம் இருக்காது.
வெள்ளை சக்கரை, பிரவுன் சக்கரை, வெல்லம் இவை எல்லாம் கரும்பில் இருந்து தான் உருவாங்குகிறது. வெள்ளைச்சக்கரையானது கரும்பு சாற்றில் தான் வெல்லப்பாகுவை எடுத்து சுத்திகரித்து தயாரிப்பார்கள் அதே போலத்தான் நாட்டு சக்கரையும் சுத்திகரிக்கப்படும்.
வெல்லத்தை தயாரிக்கும் போது மட்டும் அதை சுத்திகரிக்கமாட்டார்கள். அதனால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வித்தியாசமாக இருக்கும்.
வெள்ளை சக்கரையிலும், நாட்டுச் சக்கரையிலும், வெல்லத்திலும் ஒரே அளவிலான கலோரிகள் கொடுக்கிறது. அதிலும் நாட்டுச்சக்கரையில் வெல்லத்தோடு ஒப்பிடுகையில் இரும்பு, மெக்னீசியம், பொற்றாசியம், கல்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.
தேன் மற்றும் வெல்லத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. வெள்ளை சக்கரையுடன் ஒப்பிடும் போது இரத்த சக்கரை அளவானது திடீரென அதிகரிக்காது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.