முட்டை முகத்தில் பூசினால் என்ன நடக்கும்? மருத்துவர் கொடுத்த விளக்கம்
வழக்கமாக சருமத்தில் கடைகளில் இருக்கும் பொருட்களை வாங்கி பராமரிப்பதிலும் பார்க்க, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் பராமரித்து வந்தால் நீண்ட நாட்களுக்கு பளபளப்பாக இருக்கும்.
இப்படி சரும பராமரிப்பிற்கு முட்டை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். உண்மையில், முட்டையை முகத்தை பராமரிக்க பயன்படுத்துவார்களா? என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.
ஆம், வழக்கமாக நாம் சாப்பிடும் முட்டைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்துடன் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகிறது.
சருமம் சிலருக்கு பார்ப்பதற்கு வறண்ட திட்டுக்கள் மற்றும் துளைகளுடன் காணப்படும். இதனை சரிச் செய்ய சிலர் முட்டையை முகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
மந்தமான தன்மை, எண்ணெய் பசை அல்லது மெல்லிய கோடுகள் முகத்தில் இருந்தால் முட்டையை வைத்து வைத்தியம் செய்யலாம்.
அந்த வகையில், முட்டையை முக பராமரிப்பிற்கு பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
முட்டை பேஸ் பேக் பலன்கள்
1. சிலருக்கு முகத்தில் அதிகமான துளைகள் காணப்படும். இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மாத்திரம் முகத்தில் தடவலாம். இது அவர்களின் சருமத்திற்கு ஊட்டம் கொடுத்து முகத்தை பார்ப்பதற்கு ஏற்றவாறு மாற்றும்.
2. வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க விரும்பினாலும், அல்லது எண்ணெய் பசையைக் குறைக்க விரும்பினாலும் முகத்திற்கு முட்டையில் பேக் செய்து போடலாம்.
3.முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் 1 மேசைக்கரண்டி அளவு எடுத்து கலந்து விட்டு, ஈரமான முகத்தில் முகமூடி போன்று போட்டு, 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அதன் பின்னர் கழுவினால் முகம் பார்ப்பதற்கு ஈரத்தன்மையுடன் இருக்கும்.
4. ஒரு முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து கலந்து விட்டு, முகத்தில் தடவி சுமாராக 20 நிமிடங்கள் வரை காய விடவும். அதன் பின்னர் கழுவினால் முகத்திற்கு ஊட்டம் கொடுக்கும்.
5. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடித்து, சருமத்தை மெல்லிய அடுக்கில் தடவி விட்டு, 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் திறந்த நிலையில் உள்ள துளைகள் இறுக்கிக் கொள்ளும். எண்ணெய் தன்மை கட்டுக்குள் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |