இரத்த சக்கரை அளவைக் குறைக்கும் இட்லி: இந்த டைம் சாப்பிட்டா இன்னும் நல்லது!
இரத்த சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும். இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க காலை வேளைகளில் சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த சுவையான கோதுமை ரவை இட்லி!
தேவையான அளவு
கோதுமை ரவை- ஒரு கப்
உளுந்தம் பருப்பு – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுந்தம் பருப்பை நன்றாக கழிவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கோதுமை ரவையை தனியாக ஊற வைக்க வேண்டும்.
முதலில் உளுந்தம் பருப்பை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். மா பதத்திற்கு வந்ததும், கோதுமை ரவையை சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வரை அரைக்க வேண்டும்.
பிறகு 7 மணி நேரம் இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு இட்லி ஊற்றி சாப்பிடத்தயாராகுங்கள்.