தொண்டை புண்ணை சரிசெய்யும் புதினா டீ! 5 நிமிடத்தில் தயாரிக்கலாம்
உணவில் வாசனைக்காக மட்டுமே தயாரிக்கப்படும் புதினா ஓர் மருத்துவ மூலிகையாகும்.
புதினாவில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின் மற்றும் இன்னும் பிற சத்துக்கள் அடங்கியுள்ளன.
செரிமானத்தை எளிதாக்கும் புதினாவை சட்னி மற்றும் ஜூஸ் என எந்த வடிவில் எடுத்துக்கொண்டாலும் மருத்துவ குணங்கள் மாறாது.
இதுதவிர தொண்டை புண், தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகள், மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பலவற்றிற்கும் தீர்வாகிறது புதினா.
iStock
இந்த பதிவில் புத்துணர்ச்சியூட்டும் புதினா டீ செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
புதினா இலை– 5
டீ தூள்– அரை டீஸ்பூன்
தேன், பனங்கற்கண்டு, நாட்டுச்சக்கரை– ஒரு டீஸ்பூன்
பால் – கால் டம்ளர் (தேவைப்பட்டால்)
செய்முறை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
இதனுடன் நன்றாக அலசி எடுத்துக்கொண்ட புதினா இலைகள் மற்றும் புதினா டீ தூளை சேர்த்து கொதிக்க விடவும்.
பாதி டம்ளர் அளவு தண்ணீர் குறைந்தவுடன், வடிகட்டி விட்டு, தேன்/பனங்கற்கண்டு/நாட்டுச்சக்கரை சேர்க்கவும்.
விருப்பமானவர்கள் பால் சேர்த்துக் கொள்ளலாம், பால் சேர்க்கமாலும் அப்படியே அருந்தலாம்.