வெள்ளை சக்கரையை ஒதுக்கி விட்டு பாருங்கள்: இத்தனை தொல்லைகளும் இல்லாமல் போகும்
பொதுவாக சக்கரையை எமது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்வது இன்றியமையாதது. சில இனிப்பான நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு இந்த சக்கரை மிகவும் பயன்படுகிறது.
அதே போல உலக அளவில் சக்கரை நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல இந்த சக்கரையை பயன்படுத்தும் போது எந்த சக்கரை பயன்படுத்த வேண்டும், எந்த சக்கரையை பயன்படுத்த கூடாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இதற்கு வெள்ளை சக்கரைக்கு மிகப் பெரிய பங்குண்டு.
வெள்ளை சக்கரை
வெள்ளை சர்க்கரையால் நாம் புது புது நோய்களுக்கு ஆளாகிறோம். இதனால் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்தல், கெட்ட கொழுப்பு உருவாக்கல்,கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு, எலும்பு தேய்மானம், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் பல வியடங்களுக்கு ஆளாகியிருக்கின்றோம்.
மேலும் சர்க்கரை அதிகமாக உடலில் சேர்ந்து கெட்ட கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரிக்கும்.
வெள்ளை சக்கரை இனிப்பாக இருந்தாலும் அதில் ஊட்டச்சத்து என்று ஒன்றும் இல்லை. இவற்றை உடலுக்கு சேர்த்துக் கொண்டால் பல தீங்கான விடயங்களை தான் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு தினமும் வெள்ளை சக்கரையை நீக்கினால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என தெரியுமா?
வெள்ளை சக்கரையை நீக்கினால்
- உடல் எடையைக் குறைக்கும்
- இந்த வெள்ளைச் சக்கரையை நீக்கினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
- உணவு செரிமானம் எளிதாகவும் வேகமாகவும் நடைபெறும்
- உள்ளுறுப்புகளின் உள் வீக்கத்தைக் குறைய தொடங்கும்
- இரவில் வெள்ளை சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்த்தல் நிம்மதியான தூக்கத்திற்கு வழி செய்யும்
- இன்சுலின் அளவை அதிகரிக்கும்
இவ்வாறு இந்த வெள்ளை சக்கரையை நீக்கினால் இன்னும் பல நன்மைகள் நீங்கள் பெறலாம். மேலும் நீரிழிவு நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.