காபி குடித்துவிட்டு மாத்திரை எடுத்துக்கொள்ளலாமா? இதனால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன தெரியுமா!
பொதுவாகவே நாம் ஒவ்வொரு நாளையும் காபி அல்லது தேநீருடன் ஆரம்பிப்பது வழக்கம். ஒரு சில பேர் மாத்திரை சாப்பிடும் போது வாயில் சிறிதளவு தண்ணீர் குடித்த பிறகு மாத்திரையை போடுவார்கள்.
இன்னும் ஒரு சில பேர் டீ, காபி, பால் என எது கிடைத்தாலும் அதில் மாத்திரையை போட்டு குடிப்பார்கள் ஆனால் சரியான விடயம் அல்ல என்பது உங்களில் எத்தனைப்பேருக்கு தெரியும்.
ஆம், காபியுடன் மாத்திரைகள் உண்பதால் பல பிரச்சினைகளும் பாதிப்புகளும் ஏற்படுமாம்.
காபியுடன் மாத்திரை
தலைவலிக்கு மாத்திரை சாப்பிடும் போது அதனை காபியில் கலந்து குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு.
இது தவறான விடயம். காபியில் உள்ள காபின் மாத்திரையில் இருக்கும் சத்துக்களை உடலுக்கு சேரவிடாமல் தடுத்து விடுகிறது. எனவே காபியில் மாத்திரை போடும் பழக்கத்தை விடுவது நல்லது.
அதேபோல் மாத்திரையை சாப்பிட்ட பிறகும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காபி மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது. மயக்கம் அல்லது அமைதிப்படுத்தும் தன்மை கொண்ட மருந்தோடு காபி அல்லது காபின் கொண்ட பானம் கலப்பது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இவை இரண்டும் எதிர்விளைவுகள் கொண்டவை.
குளிர்ந்த நீருடன் மாத்திரை
குளிர்ந்த நீரில் மாத்திரை சாப்பிடும்போது அந்த மாத்திரை செயல்படுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடித்தால் அது உணவில் உள்ள கொழுப்புகள் கரையாமல் அப்படியே தேங்கிவிடும். அதேபோல ஐஸ் வாட்டரில் மாத்திரை சாப்பிடும் போது மாத்திரையின் வேலை தாமதமாகும்.
எனவே குளிர்ந்த நீரில் மாத்திரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மாத்திரை சாப்பிடும் போது நீங்கள் வாய் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் மாத்திரையை போட்டு விழுங்குவது தான் சரியான முறை.
மாத்திரையை விழுங்கிய பிறகு 250 மில்லி அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் மாத்திரை எந்த தடையும் இல்லாமல் நேராக உணவுக்குழாயில் செல்லும்.
மேலும், பாலுடன் மாத்திரைகளை எடுத்தக்கொள்ளும் போது பாலில் இருக்கும் புரதம் மற்றும் கல்சியம் மாத்திரைகளில் இருக்கும் வீரியத்தை குறைத்து அதன் வேலையை செய்ய விடாமல் தடுக்கும்.
இதனால் மருந்தில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ள முடியாமல் கழிவோடு சேர்ந்து மருந்தும் வெளியேறுகிறது.