Numerology: ஏழையாக பிறந்து கோடீஸ்வரராக சாகும் ஆண்கள் பிறந்த மாதம் எது தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் பிறந்த தேதி, கிழமை மற்றும் மாதங்களை வைத்து அவரின் ஆளுமைகளை கணிக்க முடியும்.
பல நூற்றாண்டுகளாக ஆளுமைகளைப் புரிந்துகொள்வதற்கும் உறவுகளில் பொருந்தக்கூடிய தன்மையைக் கணிப்பதற்கும் ஒரு வசீகரமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இவைகளுடன் மேற்குறிப்பிட்ட எண்கணிதமும் தாக்கம் செலுத்துகிறது.
ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல கணவராக இருப்பார்கள்.
அந்த வகையில், ஏழையாக பிறந்து பணக்காரர்களாக சாகும் ஆண்கள் பிறந்த மாதம் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
பிப்ரவரி | பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் நம்ப முடியாத அளவுக்கு மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள புத்திசாலித்தனம் அவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். பொறுமையுடன் முயற்சிச் செய்து செல்வத்தை சேகரிப்பார்கள். காலப்போக்கில் நிரந்தர செல்வத்தை உருவாக்கும் திறன் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். செலவுகளை எப்போதும் கட்டுபாடுடன் வைத்துக் கொள்வார்கள். |
மே | மே மாதம் பிறந்தவர்கள் இயற்கையாகவே தன்னம்பிக்கை மற்றும் வசீகரம் கொண்ட தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள். பண விஷயத்திலும் அவர்கள் அவ்வாறே செயல்படுவார்கள். தங்களின் பெரிய கனவுகளையும் அவர்கள் விரும்பும் விஷயங்களை துரத்திச் செல்வார்கள். இது அவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைத் தரும். |
ஆகஸ்ட் | ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் உறுதியானவர்களாக இருப்பார்கள். வெறிகொண்டு பின்பற்றுபவர்களாக இருப்பாவர்கள். இவர்கள் பணத்தை அளவு இல்லாமல் சம்பாரிப்பார்கள். இயற்கையில் தலைவர்களாக இருப்பார்க்ள. தங்கள் சொந்த பாதையை உருவாக்க விரும்பும் குணம் தான் அனைத்தையும் செய்ய வைக்கும். அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை மற்றும் லட்சியம் கொண்டவர்கள். மேலும் தங்கள் யோசனைகளை வெற்றிகரமான வணிகங்களாக மாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சொந்த தொழிலை வைத்து முன்னேற்றம் காண்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
