த்ரிஷாவின் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலனுடன் நடிகை பித்து மாதவி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். நடிகை த்ரிஷா கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
முதலில் மாடலிங் துறையில் கலக்கியவர் பின்னர் திறைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது 40 வயதை கடந்து விட்டாலும் கடந்த வருடம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வரலாற்று கதையாக கொண்டாடும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்தார்.
இவர் தற்போது விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷா காதலனுடன் பிந்துமாதவி
இந்நிலையில் தற்போது இணையத்தில் த்ரிஷாவின் முன்னாள் காதலனுடன் பித்துமாதவி இருக்கும் புகைப்படம் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
நடிகை பிந்து மாதவியும் தமிழில் ஒரு பிரபலமான நடிகைதான். இவர் கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சவாலே சமாளி, கழுகு2, ஜாக்சன் துரை, பசங்க போன்றத் திரைப்படத்தில் நடித்தவர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர்.
நடிகை பித்து மாதவி த்ரிஷாவின் முன்னாள் காதலன் வருண் மணியன் உடன் டேட்டிங் செய்து வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு வருண் மணியன் த்ரிஷாவை பிரிந்தப் பிறகு தான் நான் அவருடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்தேன் என தெரிவித்திருக்கிறார்.
த்ரிஷாவிற்கு வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.