முன்னாள் கணவர் இறந்து 3 நாட்கள்....! இப்படியொரு புகைப்படம் தேவையா? திட்டித் தீர்க்கும் இணையவாசிகள்
வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்திருந்தார். இந்நிலையில் வனிதா, ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
வனிதா
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார்.
முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.
அதன் பிறகு மூன்று திருமணங்களை செய்துக் கொண்டார் ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது.
பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.
அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
காதலனுடன் புகைப்படம்
இந்நிலையில் வனிதாவை கிறிஸ்தவ முறைப்படி 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட பீட்டர் பால் சனிக்கிழமை உயிரிழந்த செய்தி அதிகம் பேசப்பட்டு வந்தது.
இது குறித்து வனிதாவும் பல செய்திகளை வெளியிட்டு இருந்தார் இந்நிலையில் தனது முன்னாள் கணவன் இறந்து 3 நாட்கள் கூட ஆகாத நிலையில் தனது ராபர்ட் மாஸ்டருடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் போட்டியில் ரக்சிதாவிற்கு காதல் வலை வீசிய ரோபர்ட் மாஸ்டர் தான். பீட்டர் பாலுடன் திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்னதாக ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் காதலித்து வந்ததாக பல தகவல்களும் புகைப்படங்களும் உலா வந்துக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்கள் இருவரும் ஒரே திரைப்படத்தில் வேலை செய்துக் கொண்டிருப்பதாகவும் அப்போது எடுத்த புகைப்படங்களாக கூட இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.