Gap Teeth Trend: இலட்சக் கணக்கில் செலவு செய்யும் ஹாலிவுட் நடிகைகள்.. ஆனாலும் ஆபத்து!
கடந்த சில நாட்களாக இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பற்கள் கொஞ்சம் வரிசையாக இல்லாமல் வித்தியாசமான வடிவில் இருந்தால் அதனை நாம் ஒழுங்கு செய்ய நினைப்போம்.
ஆனால் தற்போது இருக்கும் ஹாலிவுட் நடிகைகள் இயற்கையாகவே பற்கள் எப்படி இருக்கிறதோ அப்படியே வைத்து விடுகிறார்கள்.
அந்த வகையில், கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் Gap Teeth Trend என பற்களுக்கு நடுவில் சிறு இடைவெளியுடன் இருக்கும் மாடல் அழகிகளின் புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அப்படியாயின், Gap Teeth Trend பற்றிய மேலதிக விடயங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Gap Teeth Trend
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அழகு கலை சார்ந்த அழகிகள், influencers, அழகு கலை சார்ந்த நிபுணர்கள் ஆகியோர் Gap Teeth Trend-ஐ பின்தொடர்ந்து வருவதால் சாதாரண மக்களும் இதனை கோடிக்கணக்கில் செலவு செய்து, செய்து வருகிறார்கள்.
இந்த Gap Teeth Trend, மற்றவர்களை விட தனித்துவமான தைரியத்தை கொடுப்பதாகவும் அவர்கள் பேசியிருக்கிறார்கள்.
இடைவெளி பற்கள் வேண்டும் என நினைப்பவர்கள் ரசாயனங்கள் நிறைந்த கலவைகளை கொண்டு பற்களுக்குள் இடைவெளியை கொண்டு வர நினைப்பது சற்று முட்டாள்த்தனமாக தெரிகிறது. இடைவெளி பற்கள் தற்போது ட்ரெண்ங்கில் இருந்தாலும், அவை நிலையாக இருக்கப்போவதில்லை என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பல் சிகிச்சை நிபுணர்களை தொடர்பு கொண்டு சுகாதார முறையில் இது போன்ற வடிவமைப்புக்களை செய்து கொள்ளலாம் என அமெரிக்க பல் சங்கம் (ADA) கருத்து தெரிவித்துள்ளது.
இன்னும் சிலர் மை பென்சில்களால் பற்களுக்க நடுவில் இடைவெளி இருப்பது போன்று வரைந்து கொள்கிறார்கள். அல்லது நூல் போன்ற பொருட்களை பயன்படுத்தி பற்களை பிரிக்க முயற்சிக்கிறார்கள். இது எளிமையான வழியாக தெரிந்தாலும், இதனால் உங்களுடைய பற்களையே நீங்கள் இழக்க நேரிடும்.

எச்சரிக்கை!
வீட்டில் பொருட்களையோ அல்லது ரசாயனங்களையோ பயன்படுத்தி பற்களுக்கு நடுவில் இடைவெளியை கொண்டு வர நினைத்தால் அது காலப்போக்கில் வேறு விதமான பிரச்சினைகளை உண்டாக்கி விடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |