மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் பிந்து மாதவி! அவரே வெளியிட்ட காணொளி இதோ
பிக்பாஸ் சீசன் 1ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்று பிரபலமானவர் தான் நடிகை பிந்து மாதவி.
ஆந்திராவில் பிறந்த இவர், தமிழில் பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
பின்பு பட வாய்ப்பு குறைய தொடங்கிய நிலையில், பிந்து பிக்பாஸில் கலந்து கொண்டார். ஆனாலும் வெளியேறிய பின்பு படவாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை.
இந்நிலையில் பிந்து மாதவி தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நான் ஸ்டாப் என்ற நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பல மொழிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள்.
தற்போது தமிழில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இதில் பல சண்டை சச்சரவுகளும் காணப்படுகின்றது.
தற்போது இதே கான்செப்டில் தெலுங்கிலும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதற்கு பிக்பாஸ் non-stop என்ற பெயர் வைத்துள்ள நிலையில், இதில் பிந்து மாதவி கலந்து கொள்ள இருக்கின்றார்.
இதனை அவரே காணொளி மூலம் ரசிகர்களுக்கு கூறியதோடு, தனக்கு ஆதரவு அளிக்குமாறு்ம் கேட்டுக்கொண்டுள்ளார்.