“த்ரிஷா என் மனைவி” உரிமைக் கொண்டாடி புரளியைக் கிளப்பிய பிரபலம்: எல்லாம் இதற்காகத் தான்!
நடிகை த்ரிஷா என் மனைவி தான் தன் சொல்லி தற்போது புரளியை கிளப்பி வருகிறார் எல்,ஏ.சூர்யா. இந்த செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். நடிகை த்ரிஷா கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். முதலில் மாடலிங் துறையில் கலக்கியவர் பின்னர் திறைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது 40 வயதை கடந்து விட்டாலும் கடந்த வருடம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வரலாற்று கதையாக கொண்டாடும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்தார்.
மேலும், தற்போது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிற்காக காத்திருக்கும் அதேவேளை இவர் தற்போது விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
த்ரிஷா என் மனைவி
இந்நிலையில் "த்ரிஷா என் மனைவி தான்" என எல்.ஏ.சூர்யா என்பவர் கூறி வருகிறார். அதுமட்டுமல்லமல் விஜய்யை எனக்கு பிடிக்காது என்றும் த்ரிஷாவின் அம்மாவோட எல்லாம் நான் பேசி இருக்கிறேன் என்றும் பீமா பட சூட்டிங்கிற்கு த்ரிஷாவை தான் கொண்டு போய் விட்டு இருக்கிறேன் என பல கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
மேலும், த்ரிஷா தான் தன்னிடம் வந்து காதலை தெரிவித்ததாகவும் நான் தான் அவரின் கணவர் என்றும் பல கருத்துக்களை கூறியுள்ளார்.
இவர் பிரபலம் அடைவதற்காகவே இப்படி கூறி வருகிறார் என ரசிகர்கள் பலரும் இவரை திட்டி வருகிறார்கள் .