பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் இலங்கைப் பெண்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு அவர் வெளியேறியிருந்தாலும் வெளியே வந்ததும் அவருக்கு அடுத்தடுத்து பல படவாய்ப்புகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழா
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வரலாற்றுத் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இதன் முதலாம் பாகம் கடந்த வருடம் வெளியாகி பெரிய வசூலை அள்ளியது.
எப்போடா அடுத்த பகுதி வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் இந்த வாரம் பொன்னியின் செல்வன் பகுதி இரண்டிற்கான பல பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கமல்ஹாசன், சிம்பு, ஐஸ்வர்யாராய், த்ரிஷா பல பிரபலங்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதில் பிக்பாஸ் பிரபலமான இலங்கைப் பெண் ஜனனியும் கலந்துக் கொண்டிருந்தார். பொதுவாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் அவர்களில் சிலர் எப்படியும் பிரபலமாகி விடுவார்கள்.
அதில் ஜனனியும் இணைந்துக் கொண்டிருக்கிறார். மேலும், இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.