த்ரிஷா இன்னும் சிங்கிளா இருப்பதற்கு காரணம் இந்த இரண்டு மாஸ் நடிகர்கள் தான்: வெளியான பகீர் தகவல்!
நடிகை த்ரிஷா இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் தான் காரணம் என சர்ச்சை நாயகன் பயில்வான் சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். நடிகை த்ரிஷா கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
முதலில் மாடலிங் துறையில் கலக்கியவர் பின்னர் திறைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது 40 வயதை கடந்து விட்டாலும் கடந்த வருடம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வரலாற்று கதையாக கொண்டாடும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்தார்.
மேலும், தற்போது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிற்காக காத்திருக்கும் அதேவேளை இவர் தற்போது விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம்
நடிகை த்ரிஷா திருமணம் செய்யாமல் சிங்கிளாக வலம் வருவதற்கு நடிகர்கள் சிம்புவும், ராணாவும் தான் காரணம் என பயில்வான் கூறி உள்ளார்.
அவர்கள் இருவரும் த்ரிஷா வை காதலித்து ஏமாற்றிவிட்டதால் தான் த்ரிஷா வுக்கு திருமணத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டதாகவும், அதன்காரணமாகவே அவர் 40 வயதை நெருங்கிய நிலையிலும் சிங்கிளாக இருந்து வருவதாக பயில்வான் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.