ராக்ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்!
தனியார் தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ராக்ஸ்டார் ரமணியம்மாள் வயது மூப்பால் காலாமானார்.
ராக்ஸ்டார் ரமணியம்மா
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப என்ற நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக அறிமுகமானவர் தான் இந்த ரமணியம்மா. இவர் 43 ஆண்டுகளாக வீட்டு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை கடந்தி வருகின்றார்.
ஆனால் இவருக்குள் ஒரு பாடும் திறமை இருக்கவே இவரை சரிகமப நிகழ்ச்சியில் சேர்த்து விட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடி அனைவரும் விரும்பும் படி வளர்ந்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு பரிசில்களையும் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மா என்ற பெயரும் வழங்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜுங்கா, சண்டக்கோழி 2, காப்பான், தணல், வசந்தம் வந்தாச்சு, சேர நாட்டு தங்கம் என சுமார் பத்து படங்களுக்குப் பாடியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தன் பாடும் திறமையால் அடிக்கடி பல நிகழ்ச்சிகளை செய்ய வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
மரணம்
இந்நிலையில், இன்று தனது வயது மூப்பு காரணமாக தனது 69 வயதில் உயிரிழந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இவரின் இறப்புச் செய்தியை இவரை வளர்த்து விட்ட தொலைக்காட்சி போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது.
‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்#SunNews | #RockstarRamaniAmmal pic.twitter.com/A4uG7Fpylm
— Sun News (@sunnewstamil) April 4, 2023