சிறுவனாக இருந்த போது எம்.ஜி.ஆர் செய்த காரியம்: சமாதியில் 34 வருடமாக அஞ்சலி செலுத்தும் தீவிர ரசிகர்
எம்.ஜி.ஆரின் நினைவு தினமான இன்று தூத்தக்குடியைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளி ஜெயசந்தின் என்பவர் கடந்த 34 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றார்.
எம்.ஜி.ஆரின் 34 வது வருட நினைவு தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏாராளமான பொதுமக்களும், பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.
நாட்டில் ஒரு தலைவர் இறந்து 34 வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் அவரை நெஞ்சில் சுமந்து கொண்டு இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான ரசிகர் ஒருவரைக் குறித்தே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறோம்.
அவரது ரசிகர்களில் ஒருவர் நீண்ட நேரம் எம்.ஜி.ஆர்., சமாதியை சுற்றி வருவதும், தள்ளி நின்று அழுவதும், திரும்பவந்து சமாதியை தொட்டு வணங்குவதுமாக இருந்துள்ளார்.
இவரை விசாரித்ததில், இவர் துாத்துக்குடி வேப்பலோடை பகுதியில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. பிறந்து வளர்ந்தது எல்லாம் தூத்துக்குடியில் தானாம். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவரது தாயார் முத்தம்மாளுக்கு எம்.ஜி.ஆர்..மீது பாசம் அதிகம் என்பதால் அவ்வப்போது, சென்னை வந்து திநகரில் அலுவலக வாசலில் மக்களோடு மக்களாக நின்று எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு செல்வது வழக்கமாம்.
ஒரு முறை சிறுவனாக இருந்த ஜெயச்சந்திரனையும் அழைத்துக் கொண்டு வந்த போது ராயப்பேட்டை கட்சி அலுவலத்தில் சரியான கூட்டத்தில் தாயுடன் ஜெயசந்திரனும் சிக்கியுள்ளனர்.
இதனை அவதானித்த எம்.ஜி.ஆர் இருவரையும் பாதுகாப்பாக தனது அருகே அழைத்து வரக்கோரி, இருவருக்கும் சாப்பாடு போட்டதுடன் , செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பியுள்ளார்.
அன்றிலிருந்து எம்ஜிஆரை ஜெயசந்திரனுக்கு பிடித்துப் போகவே தனது உடம்பில் பச்சைக் குத்தவும் செய்துள்ளார். தற்போது வைரை கட்சி மன்றத்தினை சார்ந்தில்லாமல், அவரது ரசிகன் என்ற தகுதியே போதும் என்றும் இருந்து வருகின்றார்.
எம்ஜிஆரின் திரைப்படத்தினை பார்ப்பது மட்டுமே சந்தோஷம் என்று நினைத்திருந்த ஜெயசந்திரனின் தாய் திடீரென இறந்துவிடவே பின்பு நேரில் பார்க்க வராமல் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்துள்ளார்.
எம்ஜிஆர் இறந்த செய்தியை கேட்ட ஜெயசந்திரன் அன்று துடிதுடித்து போனாராம். அவரது முதலாம் ஆண்டு முதல் இன்று வரை சென்னை வந்து அவரது நினைவு நாளில் சமாதியை வணங்கிவிட்டு செல்கின்றார்.
எனக்கு எம்.ஜி.ஆர்.,தெய்வம் மாதிரி எனது கோரி்க்கையை அவரிடம் மானசீகமாக தெரிவிப்பேன் அவர் அதை தீர்த்துவைப்பார். திருமணமாகி பத்து வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தது எம்.ஜி.ஆர்.,சமாதியில் முடியிறக்கி வேண்டிக் கொண்டேன், மறுவருடமே மகன் பிறந்தான்.
இப்போது அவனுக்கு வயது 25 ஆகிறது டிப்ளமோ முடித்துவிட்டு ரொம்ப வருடமாக வேலை தேடி வருகிறான்,‛ அவனுக்கு ஒரு வழி காட்டணும் தெய்வமே' என்று இந்த வருடம் வேண்டிக்கொண்டுள்ளேன் நிச்சயம் என் தெய்வம் எம்.ஜி.ஆர்.,வழிகாட்டுவார் என்று நம்பிக்கையுடன் காணப்படுகின்றார் ஜெயசந்திரன்.