வயதான தோற்றத்தில் அசிங்கமாக இருக்கும் பாவனி, அமீர்! வைரலாகும் காட்சி
தொகுப்பாளினி பிரியங்கா, பாவனி, அமீர் இவர்கள் மூன்று பேரும் வயதான தோற்றத்துடன் காணப்படும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி பிரியங்கா
கடந்த பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தொகுப்பாளினி ப்ரியங்கா. இவர் ஸ்ராட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இது தவிர பிக்பாஸ் சீசன் 5 இலும் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுட்ன் இணைந்து தொகுத்து வழங்குகின்றார்.
பாவனி மற்றும் அமீர்
பாவனி மற்றும் அமீர் இவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில், மூவரும் தற்போது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
பிரியங்கா தற்போது தொகுத்து வழங்கி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீர் மற்றும் பாவனி நடனமாடி வருகி்ன்றனர்.
இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீர், பாவனி மற்றும் சில பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், ஒரு விதமான பில்டர் போட்டுள்ளதால் இந்த வீடியோவில் தெரியும் அனைவரும் வயதான தோற்றத்தில் தெரிகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.