நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கனுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க
காலை வெறும் வயிற்றில் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் செயல்படும்.
மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதனால் இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண் போன்ற உடலில் இருக்கும் பிற உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே அதை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவின் மூலம் ரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகின்றது.
எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் காலை வெறும் வயிற்றில், என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்
உடம்பில் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டையை ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும்வயிற்றில் குடிக்க வேண்டும். இதில் டீ-யும் போட்டு குடித்து வரலாம்.
ஒரு ஸ்பூன் நெய்யுடன் மஞ்சள் கலந்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். நெய் நாள் முழுவதும் சர்க்கரை சாப்பிடும் ஆசையிலிருந்து விலக்கி வைக்கும். அதுபோல மஞ்சள் வீக்கத்தை குறைக்கும்.
ஊற வைத்த உலர் பழங்களை காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு சீராக வைக்கின்றது. சர்க்கரை அளவு குறைவதாக உணர்ந்தால் வெறும் வயிற்றில் உடனே புரோட்டீன் எடுத்துக் கொள்ளவும். ஆதலால் பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றை ஊற வைத்து சாப்பிடலாம்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிப்பது மிகவும் நல்லதாகும். இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் இதனை குடிக்கவும்.
நீரிழிவு நோயாளிகள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் உடலை டீடாக்ஸ் செய்யும் பானத்தை குடிப்பது ரொம்பவே நல்லது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 100 மில்லி தண்ணீரில், 30 மில்லி ஆம்லா சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் செண்டர் வினிகர் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். உங்களிடம் நெல்லிக்காய் இல்லை என்றால் எலுமிச்சை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |