Irritable Bowel Syndrome: டீன் ஏஜில் வயிற்றில் இந்த பிரச்சனை ஏற்படுகின்றதா? அலட்சியம் வேண்டாம்
செரிமான பாதை மற்றும் குடலில் ஏற்படும் பாதிப்பான இரிட்டபுள் பவல் சிண்ட்ரோமின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி Irritable Bowel Syndrome என்பது செரிமான பாதை மற்றும் குடல்களை பாதிக்கும் நாள்பட்ட நோய்.
இது செரிமானம் மற்றும் பெருங்குடல் பகுதியை பாதிக்கிறது. ஆயுர்வேதத்தில் இந்த நோய் தடுக்கவும் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இன்னும் கூற வேண்டும் என்றால் இது நோய்க் கிருமியினாலோ, சத்தக் குறைவினாலோ ஏற்படும் நோய் இல்லை.
நம் எண்ணங்களால் வயிற்றில் ஏற்படும் ஒருவித பிரச்னை. நமது குடலின் செயல்பாடுகளைத் தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது.
உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் போன்ற உணர்வுகளுக்குச் சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவுகளை உண்டாக்கும்.
செரிமான நொதிகளை பிரிக்க கூடிய கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் போன்ற தொடர்புடைய உறுப்புகளின் பாதிப்பு குறித்து சொல்லப்படும் நோய் எரிச்சல் குண்ட குடல் நோய்க்குறி.
இதன் காரணமாக, வயிற்றில் வலி, உப்புசம், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படும். இதைத் தான் `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' என்று குறிப்பிடுகின்றனர்.
Zika virus symptoms: கர்ப்பிணிகளின் கருவை சிதைக்கும் ஜிகா வைரஸ்- அறிகுறிகளுடன், ஆபத்துக்களை தெரிஞ்சிக்கோங்க
அறிகுறிகள் என்ன?
இதற்கான தனிப்பட்ட அறிகுறிகள் என்பது குறிப்பிட்டுக் கூற முடியாது. ஒவ்வொரு நபருக்கு குறித்த அறிகுறிகள் மாறுபடும்.
பல்வேறு அறிகுறிகளின் சேர்க்கையாக இருப்பதனாலேயே இதை சிண்ட்ரோம் (Syndrome=Collection of Symptoms) என்று குறிப்பிடுகிறோம்.
சிலருக்கு அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், மந்தநிலை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
மேலும் சிலருக்கு மீட்டிங், எக்ஸாம் போன்ற முக்கிய தருணங்களில் மனத்துக்குள் ஒருவித பயமும், அடிவயிற்றில் வலியும் ஏற்படும். இந்த வலி மலம் கழித்த பிறகே குறையும்.
அதீத கோபம், பதற்றம், பயம் ஆகியவற்றால் வரும் மனஅழுத்தம், ஆங்ஸைட்டி கூட இதற்கான அறிகுறிகளாக வெளிப்படலாம்.
எப்படி ஏற்படுகிறது?
அதிகப்படியான உண்ணாவிரதம் அல்லது அதிகப்படியான உணவு உட்கொள்ளல்
முந்தைய உணவு முழுமையாக ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே சாப்பிடுவது
முறையற்ற அல்லது ஆரோக்கியமற்ற உணவு எடுப்பது
தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
விஷமான உணவு
கனமான குளிர்ந்த உலர்ந்த உணவு எடுப்பது
மாசுபட்ட உணவுகளை உட்கொள்வது
இயற்கை தூண்டுதல்களை அடக்குவது
இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது
துக்கம், கோபம் போன்றவை பலவீனமான செரிமானத்தை தூண்டும்
பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு
யாருக்கு ஏற்படலாம்?
எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' ஏற்படலாம். அதிகமாக உணர்ச்சிவசப்படுவோருக்கு இந்த பிரச்சனையானது மிக எளிதில் ஏற்படுகின்றது.
குறிப்பாக, டீன் ஏஜில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இந்த பிரச்சனையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஏனெனில், இவர்களுக்கு உணர்ச்சிப்பெருக்கு அதிகமாக இருக்கும் நிலையில், இதனை அதைச் சரியாகக் கையாளவும் போதுமான பக்குவமும் இருப்பதில்லை.
ஆனாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
தீர்வு என்ன?
இதன் அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு நீண்ட நாட்களாகத் தொடர்ந்தால் அதனை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
மருத்துவர்கள் இந்த பிரச்சனையின் அறிகுறிகள் எதனால் உங்களுக்கு ஏற்படுகின்றன என்பதை முதலில் கண்டறிவார்கள்.
மேலும் வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளாலும் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதா என்றும் ஏதேனும் உணவு பிரச்சனையாலும் இந்த பிரச்சனை தோன்றும் என்பதால் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும்.
உங்களது அறிகுறிகள் அனைத்தும் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் பிரச்னைக்கு உரியதுதான் என்பது உறுதியான பின்பு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்குத் தகுந்த மாத்திரைகள் மற்றும் தொடர்ச்சியான மனநல ஆலோசனைகள் இதற்கு வழங்கப்படுவது சிகிச்சைகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |