வெளிநாடுகளை போன்று நம்ம இலங்கையிலும்.... இயற்கையே வியக்கும் றீ(ச்)ஷா பண்ணை
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிரள வைக்கும் வகையில் சுற்றுதளமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பண்னை வீடு இலங்கையில், கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் “றீ(ச்)ஷா பண்ணை” எனப்படும் ஹோட்டல் பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ இடையில் கிராமப்புறம் மற்றும் நகர்புற ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளமையினால் வித்தியாசமான சூழலொன்று நிலவும்.
இந்த ஹோட்டல் பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு வேளைகளில் வெளியே சென்று பார்வையிடும் வசதிகள் காணப்படுகிறது.
இந்த றீ(ச்)ஷா பண்ணையில் இருக்கும் அறைகளுக்கு அடிப்படை வசதிகள் அணைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் இருக்கும் அனைத்து வகையான உணவுகளை குறுகிய நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். அங்கு குடும்பமாகவோ அல்லது தனியாகவோ வருகை தந்து இளைபாருவதற்கான வசதிகள் அனைத்து உள்ளன.
இங்கு தங்குவதற்கு குறிஞ்சி தங்ககம் மற்றும் றீ(ச்)ஷா பண்ணை பதிவிட்டு தங்களுக்கு தேவையானவற்றை இணையத்தில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
அந்தவகையில் ReeCha Organic பண்ணை மேலதிக தகவல்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.