மெலிந்த உடலை பழைய நிலைமைக்கு கொண்டு வர போராடும் ரோபோ சங்கர்: வைரலாகும் வீடியோ!
கொளுகொளுவென இருந்த ரோபோ சங்கர் அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்து ஆளே மாறிவிட்டார். ஆனால் தற்போது பழைய நிலைமைக்கும் வர ஜிம்மில் வேர்க்அவுட் செய்து வரும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகின்றது.
ரோபோ சங்கர்
நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தொடர்ந்தும், மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது.
ரோபோ சங்கர் எப்போதும் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் தான் இருப்பார். ஆனால் தற்போது பார்க்கவே பரிதாபமாக மாறி விட்டார்.
உடல் எடைக்குறைந்ததற்கு அவருக்கு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்து வந்தார்கள்.
ஜிம்மில் வேர்க்அவுட்
இந்நிலையில் ரோபோ சங்கர் ஜிம்மில் வேர்க்அவுட் செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை அவரது மனைவி பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன். தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன். எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே.உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது... Come back ”எனப் பதிவிட்டிருக்கிறார்.
இதனால் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.