எனக்கு விஜய் தான் பிடிக்கும்... - பட்டென பேசிய பிரியா பவானி சங்கர்
எனக்கு விஜய் தான் பிடிக்கும் என்று ஒரு தனியார் சேனலில் நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர்
முதன் முதலில் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராகதான் ஒரு சேனலுக்கு அறிமுகமானார். இதனையடுத்து, அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதன் பின்பு, கடந்த 2017ம் ஆண்டு ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால், தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா: அத்தியாயம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார்.
கடந்த மாதம் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். கமலஹாசனின் இந்தியன் 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற படங்களில் இவர் இணைந்துள்ளார்.
எனக்கு விஜய் தான் பிடிக்கும்
எனக்கு விஜய் தான் பிடிக்கும் என்று ஒரு தனியார் சேனலில் நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
எனக்கு விஜய், சிம்ரன் சேர்ந்து நடித்த எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். இளைய தளபதியின் ரொமாண்டிக் காமெடி, ரொமாண்டிக் நடிப்பு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவர் நடித்து வெளியான காவலன் படம் கூட எனக்குப் பிடிக்கும். ஆங்கிலம் பார்த்தாலும் சரி, இந்தி படம் பார்த்தாலும் சரி, மொழியே தெரியாத படம் பார்த்தாலும் சரி ரொமான்ஸ் படம் பிடிக்கும்.
அப்படி படங்கள் பார்க்கும்போது எனக்கு தோன்றும். இதுபோல நமக்கும் படங்கள் எடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும். நம்மளையெல்லாம் நடிக்க வைப்பாங்களா என்று இப்பவும் தோன்றும், அப்பவும் தோன்றும் என்றார்.