எந்த உணவுடன் எதை சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும்னு தெரியுமா? விளக்கும் மருத்துவர்
பொதுவாகவே நாம் சில உணவுகளை சுவை நோக்கம் கருதி சேர்த்து சாப்பிடும் வழக்கத்தை தொன்று தொற்று பின்பற்றி வருகின்றோம். உதாரணத்துக்கு மாங்காய் சாப்பிடும் போது, பெரும்பாலானவர்கள் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிவார்கள்.
சிலர் பொட்டுக்டலை சாப்பிடும் போது சர்க்கரை அல்லது கற்கன்டு சேத்து சாப்படுவார்கள். தேங்காயுடன் வெல்லம் சேர்த்து சாப்படும் பழக்கத்தையும் சிலர் கொண்டிருக்கின்றாகள். அவை அனைத்தும் அந்த சேர்க்கைகள் சுவையை அதிகரிப்பதாலேயே பின்பற்றப்படுகின்றது.

ஆனால் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ நிபுணர் சிவக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்?
முருங்க கீரை - பூண்டு

முங்ககீரை சமையல் செய்யும் போது அதனுடன் பூண்டு கட்டாயமட சேர்க்க வேண்டியது அவசியமாகின்றது. காரணம் முருங்கை கீரையில் வைட்டமின் k மற்றும் நைட்ரேட்ஸ் அதிகமாக காணப்படுகின்றது.இது ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது. அதனுடன் பூண்டு சேர்த்து சாப்பிடும் போது, இதில் உள்ள அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் ரத்த குழாய் அடைப்புகளை சீர்செய்யவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. இந்த இரண்டு உணவுகளின் சேர்க்கை இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிகின்றது.
சோயா பீன்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு

சோயா பீன்ஸ் சுண்டல் செய்யும் போது, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம் சோயா பீன்ஸில் காணப்படும் இரும்புச்சத்தை உடல் எளிதில் உறிஞ்சும் தன்மைக்கு மாற்றும் தொழிலை எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி செய்கின்றது.
மஞ்சள் பூசணி மற்றும் முந்திரி

மஞ்சள் பூசணியை சமையல் செய்யும் போது அதனுடன் சிறிதளவு முந்திரியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.இதில் பீட்டா - கெரட்டின் மற்றும் வைட்டமின் சி செரிந்து காணப்படுகின்றது.இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது அது போல் முந்திரியில் காப்பர் மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு உணவுகளின் சேர்கை கொலாஜன் உற்பத்தியை சீராக்கி சரும ஆரோக்கியத்தை காக்க துணைப்புரிகின்றது.
முட்மை அல்லது சிவப்பு காராமணி மற்றும் பால்

முட்டை அல்லது ராஜ்மா எனப்பதும் சிவப்பு காரமணியை சாப்பிடும் போது இதில் காணப்படும் போலிக் அமிலம் காணப்படுகின்றது. அதனுடன் தவறாமல் ஒரு கிளாஸ் பால் குடிப்பதால், வைட்டமின் B12 கிடைக்கின்றது. இது குருதியில் சிவப்பணுக்களை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது.