பிரபல நகைச்சுவை நடிகரின் தாயார் மரணம்: கண்கலங்கி நிற்கும் பிரபலங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.
1988ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது.
மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நாய் சேகர் திரைப்படம் மூலம் ஹிரோவாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்டி கொடுத்தார்.
மரணம்
இந்நிலையில், மதுரை வீரகனூரில் வசித்து வந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கின்ற பாப்பா (87) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, வடிவேலு தாயாரின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#Vadivelu About His Mother Death pic.twitter.com/D7Ng4I0hmI
— chettyrajubhai (@chettyrajubhai) January 19, 2023