ஆளே மாறிட்டாங்களே! கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் சரிகமப புகழ் இனியா
பிரபல நடிகை தேவயானியின் மகள், சரிகமப புகழ் இனியா முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம ட்ரெண்டியாக உடையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சரிகமப இனியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப சீனியர் சீகன் 5 இல் போட்டியாரளாராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இனியா.

இந்த சீனனில் ஆரம்பம் முதலே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆதரவையும் பெற்ற போட்டியாளர்களின் பட்டியலில் இனியாவுக்கும் முக்கிய இடம் காணப்பட்டது.
ஆனாலும், பலரின் எதிர்பார்ப்புக்கு அப்பால், இனியா இறுதிப் போட்டியாளர்கள் வரிசையில் தேர்வாகவில்லை. இறுதி தருணத்தில் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

இருப்பினும் இவருக்கு இந்நிகழ்சியின் மூலம் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது என்னறால் மிகையாகாது.
ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் தன் மகளை பாடகியாக மாற்றக்கூடிய செல்வாக்கு தேவயானிக்கு இருந்தும் தன் திறமையாலும் அவரின் சொந்த முயற்சியாலும் மட்டுமே தனது மகள் வெற்றி பெற வேண்டும் என்ற தேவயானியின் நோக்கத்தையும் இனியாவின் நேர்மையையும் பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

தற்போது இனியா ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாகி இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகியிருந்ததுடன் அவருக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் செம ட்ரெண்டியான ஆடையில் ஹீரோயின்களையே மிஞ்சும் அளவுக்கு அசத்தல் போஸ் கொடுத்து இனியா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |