கலக்கப்போவது யாரு சரத் வீட்டில் புதுவரவு! மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்தான் காமெடியன் சரத். இவர் பார்ப்பதற்கு நடிகர் மொட்டை ராஜேந்திரன் தோற்றத்தை ஒத்திருந்த சரத், தீனாவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளை கலக்கப்போவது யாரு மேடையில் நிகழ்த்தி இருக்கிறார்.
மொட்டை ராஜேந்திரன் வசனத்தை பேசி அவரைப்போன்றே நடித்திருந்த சரத்தின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக இடம் பெற்றிருந்த சரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கிருத்திகா என்றவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சரத். தற்போது இவர்கள் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில், சரத் வீட்டுக்கு புதுவரவு ஒன்று வந்துள்ளது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? அதாவது அவர் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அந்தப் படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சரத், அது தனது மனைவி கிருத்திகாவின் அன்பான பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், சரத் - கிருத்திகா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.