ஒல்லியாக சுருட்டை முடியுடன் ரோபோ ஷங்கர் மனைவி... என்னது திரைப்படத்தில் நடித்துள்ளாரா?
விக்ரம் மற்றும் லைலா நடிப்பில் வெளியான தில் படத்தில் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா நடித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தனது கொமடி திறமையினாலும், மிகிக்ரி பேச்சினாலும் ரசிகர் பட்டாளத்தினை திரட்டியுள்ளவர் தான் நடிகர் ரோபோ சங்கர். தற்போது வெள்ளித்திரையில் கால்பதித்து படுபிஸியாக நடித்து வருகின்றார் ரோபோ சங்கர்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் மனைவி பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் காமெடி ஷோ ஒன்றில் போட்டியாளராக பங்குபெற்றதுடன், பின்பு குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமானார்.
ரோபோ சங்கரின் மனைவி வெள்ளித்திரையில் நடிக்காத காரணத்தினாலே இவ்வாறு சின்னத்திரையில் பங்குபெற்று பிரபலமடைந்து வருகின்றார் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்க வேளையில், நடிகர் விக்ரம் படத்தில் இவர் நடித்துள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் தீயாய் பரப்பி வருகின்றனர். ஆம் பிரியங்கா விக்ரம், நடிகை லைலா நடித்திருந்த தில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் லைலா ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்பது போன்ற சமையல் காமெடி காட்சியில் நடித்துள்ளார்.