வொர்க் அவுட்டில் ஜிம் மாஸ்டரையே மிஞ்சிய பிரபல நடிகை! ஷாக்கான நெட்டிசன்கள்
மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகை சமந்தா தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.
இவரின் எண்ணற்ற முயற்சியாலும், சினிமா மீது இருந்து தீவிர ஆசையினாலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் சில வருடங்களில் இருவரும் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் புஸ்பா படத்தில் "ஓ சொல்றீயா மாமா" என்ற பாடலில் யாரும் எதிர்பார்க்காத கவர்ச்சியை காட்டி அசத்தினார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக மயோசிடிஸ் என்ற கொடிய நோய் தாக்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா மீண்டு வர வேண்டுமென பிரார்த்தனை செய்து வந்தனர்.
கடுமையான வொர்க் அவுட் இறங்கிய சமந்தா
இதற்கிடையே சினிமாவிலிருந்து விலகி சிறிதுக் காலம் ஓய்வெடுக்க சமந்தா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஜிம்மில் வொர்கோட் செய்யும் வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் "சமந்தாவின் பில்டப்பை பார்த்தால் ஏதோவொரு படத்தில் மீண்டும் வருவார்" என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.