மீண்டும் முடிவில் இருக்கிறாரா செல்வராகவன்? மனைவி செயலால் எழுந்த சர்ச்சை
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் செல்வராகவனின் மனைவி செய்த ஒரு விடயத்தை வைத்து இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்களா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குநர்களில் ஒருவர் தான் செல்வராகவன்.
இவரை ரசிகர்கள் ஜீனியஸ் இயக்குநர் என கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வசூல் வேட்டையில் அள்ளிய காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் கடந்த 2006-ம் ஆண்டு சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 7ஜி போன்ற படத்தின் படிப்பிடிப்பு துவங்கிய போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
விவாகரத்தில் முடிகிறதா மறுமணம்?
இந்த நிலையில் செல்வராகவன், கீதாஞ்சலி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர், செல்வராகவனிடம் மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது அதன் பின்னரே தெரியவந்தது.
உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலி கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் குடும்பம், குழந்தை என செட்டிலாகி விட்டார்.

செல்வராகவன் - கீதாஞ்சலி திருமணமாக 14 வருடங்கள் கடந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீதாஞ்சலி, செல்வராகவனின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனை கவனித்த விமர்சகர்கள் இருவரும் பிரியப்போகிறார்களா? என சந்தேகித்து அடுத்தடுத்து சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சர்ச்சைக்கு செல்வராகவன் - கீதாஞ்சலி தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகின்றது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். இவருடைய தம்பியான நடிகர் தனுஷ் அண்மையில் தான் விவாகரத்து வாங்கி முழுமையாக மனைவியை பிரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |