பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகையாக ரீ என்ரி கொடுக்கும் பிரபல தொகுப்பாளினி: யார் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வருகிறார் 90ஸ் கிட்ஸ்களின் ப்ரியமான தொகுப்பாளினி.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்தப் பாசக்கதையை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள். இவர்கள் நால்வரும் தற்போது திருமணம் செய்து விட்டார்கள்.
திருமணம் முடிந்தும் இவர்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்று பக்கங்களாக சிதறிப் போய் விட்டது.
இந்நிலையில் தற்போது முல்லைக்கு வளைக்காப்பு நடைபெற்றது இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்வார்களா என்ற எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது ஒவ்வொருவராக வந்து சேர்ந்துக் கொண்டார்கள்.
சீரியலில் களமிறங்கிய தொகுப்பாளினி
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபல தொகுப்பாளினியான பெப்ஸி உமா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெப்ஸி உமா பிரபல தொலைக்காட்சியில் “பெப்ஸி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். இந்த நிகழ்ச்சியில் தான் இவருக்கு நடிகைகளுக்கு இருக்கும் அளவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகியது.
இந்த நிகழ்ச்சி பிரபல்யமாகவே “பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியின் பெயரை இவருக்கு அடைமொழியாக கொடுத்து பெப்ஸி உமா என்றப் பெயரில் அதிகம் பிரபல்யமானார்.
இவருக்கு சினிமா வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்துக் கொண்டிருந்த போதிலும் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டு இந்த நிகழ்ச்சியோடு காணாமல் போய் விட்டார்.
இந்நிலையில் தற்போது சீரியலில் அதுவும் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியலில் நடிக்க வருகிறார் என்ற செய்தி மக்களை இன்னும் சந்தோசப்படுத்தியுள்ளது.