நாலா பக்கமும் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்: கண்ணனின் முடிவு என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஒவ்வொருவராக பிரிந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறும் காட்சி ப்ரோமோவாக வெளியேறியிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்தப் பாசக்கதையை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள். இவர்கள் நால்வரும் தற்போது திருமணம் செய்து விட்டார்கள்.
இவர்கள் அனைவரும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
மேலும், தற்போது அந்தவீட்டில் வரிசையாக 3 பேரும் கர்ப்பமாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஜீவாவின் மனைவி மீனாவின் தங்கைக்கு திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணம் தான் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு பிரிந்து போக காரணமாகியிருக்கிறது.
வீட்டை விட்டு வெளியேறுவாரா கண்ணன்?
மீனாவின் தங்கை திருமணத்தில் எல்லோரும் தனித்தனியாக மொய் வைக்க அதில் ஜீவா மட்டும் மொய் வைக்காமல் அசிப்பட்டு விட்டதாக யாரும் வேண்டாம் என்று மாமனார் வீட்டில் இருந்து விட்டார்.
இந்நிலையில் எல்லோரும் விட்டிற்கு வந்ததும் கண்ணனுடன் சண்டை ஆரம்பிக்க இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா கோவப்பட்டு எதிர்த்து பேசி பெட்டிபடுக்கைகளை எடுத்துக் கொண்டு “நான் வேண்டுமா..? இவங்க வேண்டுமா..? ”எனக் கேட்கின்றார்.
அதற்கு கண்ணன் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது தான் அடுத்தக் கட்டத்தை இன்னும் விறுவிறுப்புடன் காத்திருக்க வைத்திருக்கிறது.