25 வருடத்திற்கு பிறகு வெளியே தலைகாட்டிய ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ உமா- வைரல் புகைப்படம்
25 வருடத்திற்கு பிறகு வெளியே தலைகாட்டிய ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ உமாவின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெப்சி உமா
90களில் டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை தனக்கே வைத்திருந்தவர் தொகுப்பாளினி பெப்சி உமா. இவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியின் ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இவர் ஒருவர் மட்டுமே தொகுத்து வழங்கினார். அவருடன் ரசிகர்கள் உரையாடும்போது, இவர் எதார்த்தமாக பேசக்கூடியவர். அப்போது, ‘ஓ’ என்ற ஒரு வார்த்தை ரசிகர்களை கவர்ந்திழுத்தது.
ரசிகர்களிடம் ரொம்ப சகஜமாக, தோழி போல பேசுவார். அதிலும் இவருடைய கம்பீரக் குரல், சிரிப்பு, அழகு இவற்றை வர்ணிக்காதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு பெப்சி உமாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது.
இவர் இந்த நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. அதனாலேயே இவரின் பெயரிலேயே இந்நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டப்பட்டது.
தலைகாட்டிய ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ உமா
தற்போது, இவர் 25 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பெப்சி உமா.
இந்நிகழ்ச்சியில், இவருடன் செய்தி வாசிப்பாளர் ரத்னா, விஜய் பாரதி ஆகிய பிரபலங்களும் கலந்து கொண்டனர். இவர்கள் மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுமார் 25 வருடங்கள் கழித்து பெப்சி உமாவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள், மறுபடியும் உங்கள் சாய்ஸ் போன்றே வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு பெப்சி உமா பங்கேற்க வேண்டும் என்றும், பெப்சி உமா, அப்ப மாதிரியே அப்படியே இப்போதும் இருக்கிறாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.