ஷூ, செருப்பிற்காக கூட சண்டை வரும்! அண்ணன் சூர்யா பற்றிய உண்மைகளை உடைத்த தம்பி கார்த்தி
சட்டை, ஷூ, பைக் என்று எதை எடுத்தாலும் சிறு வயதில் சூர்யாவுக்கும் தனக்கும் சண்டை வருவதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவினுடைய தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள படம் தான் விருமன்.
இந்த நிலையில் தனக்கும் அண்ணன் சூர்யாவுக்கும் இடையில் எப்படியான உறவு இருந்தது என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன வயதில் அனைத்து அண்ணன் தம்பிகள் போலவே தானும் சூர்யாவும் சண்டை போட்டுக் கொள்வோம்.
சட்டை, ஷூ, பைக் என்று எதை எடுத்தாலும் இருவருக்குள்ளும் சண்டை வரும்.
இருவரையும் ஒன்றாக தங்க வைக்க வீட்டில் பயப்படுவார்கள். சூர்யாதான் எப்பவுமே தன்னை அடிப்பார் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
வீட்டில் மட்டுமல்லாமல் பள்ளிக்குச் சென்றாலும் ஸ்டூடண்ட்ஸ் ஹெட் பொறுப்பில் இருந்ததால் சூர்யா அங்கும் கார்த்தியை முட்டி போட வைப்பாராம்.
இப்படி சின்ன வயதிலிருந்தே சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கிடையே கார்த்தி வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றதும் ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டதாம்.
அப்போது படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியவர் வீட்டில் கூட தங்காமல் நந்தா படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்த சூர்யாவை பார்ப்பதற்கு உடனே கிளம்பி சென்று விட்டாராம்.
முதன்முதலில் அப்போதுதான் இனம் புரியாத பாசம் சூர்யா மீது ஏற்பட்டதாக கார்த்தி கூறியுள்ளார்.
சூர்யா தங்கியிருந்த அறைக்குச் சென்று கதவை தட்டியதும் கருப்பாக அரை மொட்டை தலையுடன் ஒரு நபர் கதவை திறக்க, அது சூர்யாதான் என்று தெரியாமல் அவரிடமே அண்ணன் இல்லையா என்று கார்த்தி கேட்டாராம்.