நடிகர் ஜெகன் வீட்டில் மரணம்! உருக்கமான பதிவு வெளியிட்டு கவலையை பகிர்ந்த பிரபலம்
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஜெகனின் தாயார் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பயணம்
விஜய் தொலைக்காட்சியில் “கடவுள் பாதி மிருகம் பாதி” என்ற நிகழ்ச்சியில் வித்தியாசமாக நடத்தி பிரபலமாகியவர் தான் நடிகர் ஜெகன்.
இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு “கண்ட நாள் முதல்” படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் நடிகர் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா படத்திலும் துனை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இதன் பின்னர் இவருக்கு பெரியளவு வாய்ப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
உருக்கமான பதிவு
இந்த நிலையில் நடிகர் ஜெகனின் தாயார் நீண்ட நாட்கள் நோய் வாய் பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ கடந்த ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என் தாயார் மரணமடைந்துள்ளார்.
என் துக்கத்தில் பங்கேற்று ஆறுதல் கூறிவரும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி. கடைசி வரை அம்மாவை காப்பாற்ற போராடிய மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெகனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.