வாயில் துர்நாற்ற பிரச்சினையா? இது உங்களுக்கான டிப்ஸ்!
பொதுவாக துர்நாற்றம் பிரச்சினை வாயினுடன் மட்டும் தொடர்புடைய பிரச்சினையல்ல, வயிற்றில் ஏற்படும் வயிற்றுக் கோளாறு அல்சர், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளாலும் ஏற்படலாம்.
பொதுவாக சிலருக்கு வயிற்றில் இருக்கும் பிரச்சினைகளின் முன் எச்சரிக்கையாக தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் துர்நாற்றம் பிரச்சினைகள் தெடர்பாகவும் அதற்கான தீர்வு தொடர்பாகவும் தெரிந்துக் கொள்வோம்.
சரிசெய்யும் வழிமுறைகள்?
நாம் தினமும் உணவுப் பொருளை சாப்பிட்ட பின்னர் நன்றாக வாயை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உணவுத் துகள்கள் நமது பற்களில், ஈறுகளில், நாக்கில், தங்கி கெட்ட பாக்டீரியாக்களை உருவாக காரணமாக அமைந்து விடுவதுடன் வாய்துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.
பொதுவாக இரவில் சாப்பிடும் உணவில் அதிகப்படியான மாசாலா, எண்ணெய் பதார்த்தங்கள், பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது போன்ற பதார்த்தங்கள் அல்சர் நோய் உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படுத்தும்.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் வைத்துக் கொள்ளலாம்... இது பாக்டீரியாக்களின் செயற்பாட்டை குறைக்கிறது. இதனால் வாய் துர்நாற்றம் பிரச்சினை காலப்போக்கில் குணமடையும்.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் புதினா, வெற்றிலை போன்ற இலை வகைகளை எடுத்துக் கொள்வர் ஏனெனில் இதிலிருந்து வரும் மணம் வாயிலிருந்து வெளிவரும் மணத்தைக“ கட்டுபடுத்தும்.
பாக்டீரியாக்களை அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் கட்டுபடுத்தலாம். இவ்வாறு செய்வதால் இதன் தொழிற்பாடு குறைவாகவே இருக்கும்.