இன்ஸ்டாகிராம் காதலனுக்காக யூடியூப்பை பார்த்து குழந்தை பெற்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யூடியூப்பை பார்த்து குழந்தையை பெற்று பின்னர் அந்த குழந்தையை கொன்ற சிறுமியின் சம்பவம் இணையாசிகளை மிரள வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் முளைத்த காதல்
மகாராஷ்டிரா - நாக்பூர் என்ற பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் இன்ஸ்டாகிராமில் தாக்கூர் என்ற நபருடன் நண்பராகியுள்ளார். இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக பழகி வந்துள்ளார்கள்.
அப்போது சிறுமியின் தாயார் ஒரு சண்டையில் சிறுமியின் செல்போனை எடுத்து உடைத்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ தினத்தன்று சிறுமியின் அறையில் தரையில் சில இடங்களில் இரத்தம் கறை இருந்துள்ளது.
இதனை கவனித்த தயார் சிறுமியிடம் கேட்ட போது சிறுமி மாதவிடாய் காலம் இதனால் தான் இவ்வாறு கறை இருக்கிறது என கூறியுள்ளார்.
இதனை நம்பமால் குறித்த சிறுமியின் தயார், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தான் இந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியே வந்துள்ளது.
குழந்தையை பெல்ட்டால் கழுத்தை நெறித்து கொலை செய்த சிறுமி
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் காதலருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், குறித்த சிறுமியின் பலாத்காரமாக கர்ப்பமாகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து குறித்து மருத்துவமனைக்கு பக்கத்திலிருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளது. விசாரனையில், பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
குழந்தை எப்படி பெறுவது என்பதை தெரிந்துக் கொள்ள அவர் யூடியூப்பை நாடியதாக குறித்த சிறுமி கூறியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட இரத்தக்கசிவால் குறித்து சிறுமி தயாரிடம் மாட்டியுள்ளார். சிறுமியை ஏமாற்றிய நபரின் முழுமையான தகவல் சிறுமிக்கு தெரியாத காரணத்தால், சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் “சைபர் க்ரைம் ” உதவியை நாடியுள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், குறித்த சிறுமி மருத்துமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள், சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை தடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.