அம்மாவை பார்த்து கதறிய பிரபலம்! கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி
பிக் பாஸ் வீட்டில் அம்மாவை பார்த்து ரக்ஷிதாவை பார்த்து கத்தி அழுதுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர். வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் முக்கிய போட்டியாளரான தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் தற்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அசிம், விக்ரமன், சிவின் மற்றும் மைனா உள்ளிட்டோர் முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
ரக்ஷிதாவின் உருக்கமான பதிவு
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவர் ஆரம்பத்தில் சேவ் கேம் விளையாடி வருகிறார் என பலரால் குற்றஞ்சுமத்தப்பட்டது. இதனை ரசிகர்கள் மற்றும் கமல் அவர்களும் அடிக்கடி வலியுறுத்திய பின்னர் இவர் தற்போது பிக் பாஸின் டைட்டில் வின்னர் அளவிற்கு விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் அம்மாவை பார்த்து அழுது புலம்பியுள்ளார். இதனை பார்த்த சக போட்டியாளர்களும் ரக்ஷிதாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.