மருத்துவமனையில் தாய்! பிரபல நடிகர் கண்ணீருடன் வெளியிட்ட பதிவு
பிரபல கொமடி நடிகர் ஜெகன் தன்னுடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கவலையுடனும், கண்ணீருடனும் பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜெகன்
பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பான 'கடவுள்பாதி மிருகம்பாதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் காமெடி நடிகர் ஜெகன்.
பின்பு சின்னத்திரையிலிருந்து கடந்த 2005ம் ஆண்டு கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்பு பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது, 'பள்ளு படமா பாத்துக்கோ' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சின்னத்திரை மற்றும் விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வரும் இவர் இன்ஸ்டாவில் தனது தாய் குறித்த பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், என் தாய்சேயாகிறாள், உடல் நலம் குறைந்நு எங்களை ஈன்றவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்...
ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள்... எங்களை ஈன்றபோது எத்தனை இரவுகள்... இப்படிதானே கவலை தோயத்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய்.
இந்த ஓர் இரவில் என் நன்றி கடனை திரும்ப தர இயலாது என்பதை எண்ணி கூனிப்போகிறேன்... உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன். என பதிவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, ரசிகர்களும் அவரின் தாயார் நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.