அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜயகாந்த்: மாந்த்ரீகம் தான் காரணம்..! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை மாற்றத்திற்கு மாந்த்ரீகம் தான் காரணம் என பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்த விடயம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் 80,90 களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உச்சத்தில் நின்றவர் விஜயகாந்த்.
இவரின் கிராமத்து பாணியில் நடிக்கும் நடிப்பு தான் பட்டித்தொட்டியெல்லாம் இவரை பிரபலமடைய வைத்தது. விஜயகாந்தின் நடிப்பில் கேப்டன் பிரபாகரன், கஜா, ரமணா போன்றத் திரைப்படங்கள் மக்களை இன்னும் ஈர்த்திருந்தது.
சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் இவர். 100ஆவது படம் தான் கேப்டன் பிரபாகரன் இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்துப்போக மக்களை இவரை கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குநராகவும் தயாரிப்பாளர் என வலம் வந்தவர். மேலும், நடிகர் சங்கத் தலைவராக இருந்தார். பின்னர் அரசியலுக்கு சென்று மக்களின் ஆதரவால் 2முறை எம்எல்ஏ வாக இருந்திருக்கிறார்.
பின்னர் உடல்நலக்குறைவால் உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.
இது தான் காரணம்
விஜயகாந்தின் உடல் நிலை மோசமானதற்கு மாந்ரீகம் தான் காரணம் என சொல்லியிருக்கிறார் பத்திரிக்கையாளர் பாலு. விஜயகாந்தின் நண்பனான ராவுத்தர் தான் விஜயாந்தின் வாழ்க்கையை வெளிச்சமாக்கியவர்.
விஜயகாந்தும் ராவுத்தரும் அப்படி இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தார்களாம் ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு விஜயகாந்த் திருமண வாழ்க்கை தானாம்.
திருமணத்திற்குப் பிறகு தான் விஜயகாந்தின் உடல் ஆரோக்கியம் மோசமானதாகவும் அதற்குக் காரணம் அவரின் மனைவி தான் என பல தகவல்கள் வெளியாகி இருந்தது இது உண்மை தானா? எனக் கேட்டதற்கு பாலு பதிலளித்திருந்தார்.
அவர் கூறியதாவது, நானும் இந்தத் தகவல்களை பத்திரிக்கையில் தான் பார்த்தேன் விஜயகாந்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு ஏதோ மாந்ரீகம் செய்து உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாகவும் வெளிவந்திருந்தது. ஆனால் இது உண்மையா, பொய்யா என்று எனக்கும் தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.