தந்தை விஜயகாந்தின் பாணியில் அசத்திய பிரபாகரன்... தீயாய் பரவும் காட்சி
தேமுதிக தலைவரான விஜயகாந்தின் மகன் அவர் நடித்த படத்தின் பாடல் ஒன்றிற்கு, அவரைப் போன்றே வாயசைத்து அசத்தியுள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.
அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த், தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வரும் நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
பிரபாகரன், சண்முக பாண்டியன் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரபாகரன் அரசியலிலும், இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமா திரைப்படங்களிலும் நடிகராகவும் வலம் வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது தந்தை விஜயகாந்த் நடித்த படமான ‘தவசி’ படத்தில் ‘ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.
அந்த பாடல் வரிகளை அழகாக வாய் அசைத்து பாடியுள்ளார். ரசிகர்களை கவந்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.