மீண்டும் மோசமான உடல்நிலை: தீவிர சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்த்! மனைவி வெளியிட்ட உண்மை
தே.மு.தி.க தலைவரான நடிகர் விஜயகாந்த் சில காலங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுவரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த தகவலை அவரது மனைவி வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்த்
கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசாரத்தில் ஈடுபட வைத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார்.
பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் மனைவி உடைத்த உண்மை
சென்னையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதாவிடம், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கையில், விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.
இருப்பினும் விரைவில் அவர் பழைய நிலைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.