அவதூறு பரப்புறாங்க! நடந்தது இதுதான்... நீயா நானா யாமினி உருக்கமான பதிவு
நீயா நானா நிகழ்ச்சியில் தனது காதல் தோல்வி அனுபவத்தை பகிர்ந்து அனைவரையும் உருக்கத்தில் ஆழ்த்திய யாமினி தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுளாளர்.

நீயா நானா யாமினி
கடந்த வார எபிசோடில், "காதல் தோல்வியில் தவிக்கும் இளைஞர்கள்" என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், யாமினி தனது 4 வருட காதல் குறித்து பேசி இருந்தார்.
தான் ஒரு டாக்ஸிக்காக மாறி விட்டதாகவும் தனக்கு அந்த நபரை இப்போதும் பிடிக்கும் ஒரு வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அந்த பெண்ணிற்கு ஒரு அட்வைஸ் கொடுத்து அனுப்பினார். அதாவது "வாழ்க்கையை காதலிலேயே சுருக்காதீர்கள்.
உலகம் உங்களுக்காக இருக்கிறது.. இந்த பரந்த உலகத்தில் இன்னும் பார்க்க ஏராளமாக இருக்கிறது" என்று கூறி அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். இதன் பின்னர் யாமினி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாமினியின் காணொளி
இந்த நிலையில் யாமினி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் மிகவும் உருக்கமாக பேசினார். "நான் என்னுடைய உண்மையான அனுபவத்தை தான் பகிர்ந்தேன்.
அதற்காக என்னை இப்படிப் பேசுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் சில தவறான தகவல்களை பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

தன்னுடன் இருக்கும் ஒரு இளைஞரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, "இவர்தான் காதலன்" என்று தவறாக அவதூறு பரப்புறீங்க "அவர் என் தம்பி மாதிரி... ஒரு சின்ன பையன்.
அவனுடைய வாழ்க்கையையும் கெடுக்காதீர்கள். "நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது, என்னைப் போன்றவர்களிடம் இருந்து ஒரு ஆறுதல் கிடைக்கும் என்று தான்.
ஆதரவு கிடைத்தது உண்மை... ஆனால் இதே நேரத்தில் இந்த விமர்சனங்களும் மனஅழுத்தமும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |