விஜயகாந்தை திருமணம் செய்ய போட்டிபோட்ட 3 நடிகைகள்: கருப்பு எம்ஜிஆரின் பலரும் தெரிந்திடாத கதை
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சினிமாவில் சிங்கமாக திகழ்ந்த இவர் பின்பு அரசியலில் நுழைந்து, அதிமுக-விற்கே எதிர்கட்சியாக சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் இவரது அரசியல் சார்ந்த வேலைகளை எல்லாம் அவரது மனைவியும், மகனும் தான் பார்த்து வருகின்றனர். மனைவியின் கைக்கு அரசியல் சென்றதால் அதிருப்தியில் ஆழ்ந்த தொண்டர்கள் பின்வாங்கியதால், இவர்களின் கட்சி பெரும் அடியை சந்தித்தது.
அன்று கம்பீரமாக நின்ற விஜயகாந்த் இன்று இருக்கும் நிலை பலரையும் கண்கலங்கவே வைக்கின்றது. ஆம் இன்றும் கருப்பு எம்ஜிஆர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான விஜயகாந்தைக் குறித்து பலருக்கும் தெரிந்திடாத விடயத்தினைக் காணொளியில் காணலாம்.
சினிமாவில் இருக்கும் தருணத்தில் விஜயகாந்த்தும் கிசுகிசுவில் சிக்கினாராம். அப்படியாக, விஜயகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மூன்று நடிகைகளை காதலித்துள்ளார் என்று பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
ஆரம்ப காலகட்டங்களில் அறிமுகப் படங்களில் நடித்தவர் நடிகை பத்மா பிரியா. இவருக்கு சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு சொந்தமாக ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளாராம். சில காரணங்களால் அது மறைய, தூரத்து இடி முழக்கம் படத்தில் நடித்தவர் பூர்ணிமா.
விஜயகாந்தை காதலித்த பூர்ணிமாவுக்கும் அதே பகுதியில் ஒரு பெரிய பங்களா வாங்கி கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் சொந்தமாக பெட்ரோல் பங்க் ஒன்றையும் வைத்து கொடுத்து பத்திரமாக பாதுகாத்து வந்தாராம். இதையெல்லம் தவிடுபொடியாக்கியது நடிகை ராதிகா விஷயம்.
விஜயகாந்தை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ராதிகா செய்த விஷயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தாலும் ராதிகாவுக்கு விஜயகாந்த் எட்டாக்கனியாகவே இருந்து விட்டார்.
கடைசியாக தனது பெற்றோர்கள் பார்த்த பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலானார் விஜயகாந்த்.