டாஸ்க்கில் ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டரின் லீலைகள்! வாயை பிளந்து வேடிக்கை பார்க்கும் ஜனனி
பிக் பாஸ் கொடுத்த டாஸ்கை ராபர்ட் மாஸ்டர் இது தான் வாய்ப்பு என்று ரொமன்ஸை ரக்ஷிதா மீது அள்ளித் தெளித்து வருகிறார்.
பிக்பாஸின் பரிணாம வளர்ச்சி
நாம் அனைவரும் எதிர்பார்த்தாற்போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஆரம்பித்து மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள போட்டியாளர்களாக பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதிலிருந்து சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஷ்வரி என நான்கு பிரபல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வாரம் தனலெட்சுமி வெளியேற்றப்படலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிக் பாஸால் இந்த வாரத்திற்காக அரச குடும்பம் தொடர்பான டாஸ்க்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ராபட் மாஸ்டரை அரசராகவும் ரக்ஷிதாவை ராணியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராபட் மாஸ்டரின் லீலைகள்
ராபட் மாஸ்டர் ரக்சிதா மகாலட்சுமி மீது ஆரம்பித்திலிருந்தே காதல் வலை வீசிக்கொண்டிருந்தார்.
இதற்கு ஏற்றால் போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கும் அமைந்துவிட, நடனம் ஆடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிக் பாஸ் வீட்டில் முத்து பட பாடல் ஒளிக்க ராபட் மாஸ்டரும் இதான் வாய்ப்பு என்று ரக்ஷிதாவிடம் அத்துமீறி நடனமாடி வருகிறார்.
இதனை இளவரசியான ஜனனி ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.