வனிதாவின் முன்னாள் கணவர் திடீர் மரணம்: மரணத்திற்கான காரணம் என்ன?
வனிதாவின் முன்னாள் கணவர் திடீர் மரணமடைந்துள்ள தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வனிதா
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார்.
முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.
அதன் பிறகு மூன்று திருமணங்களை செய்துக் கொண்டார் ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது.
பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.
அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
கணவர் மரணம்
இந்நிலையில் இன்று வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் உயிரிழந்திருக்கிறார்.
வனிதாவும், பீட்டர் பாலும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.