ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகள்! ஒரே இளைஞர் மீது ஏற்பட்ட காதல்: பின்பு நடந்தது என்ன?
மூன்று சகோதரிகளில் ஒருவர், தாங்கள் சிறுவயதில் இருந்தே அனைத்தையும் பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் கணவனைப் பகிர்ந்துகொள்வது தங்களுக்கு கடினமான தேர்வாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
ஒரே நேரத்தில் பிறந்த மூன்று சகோதரிகளை ஒரே நாளில் இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்ட சம்பவம் காங்கோவில் நடந்துள்ளது. அவரின் இந்த திருமணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற சிறப்புத் திருமண விழாவில், 32 வயதான லுவிசோ, நாடேஜ், நடாஷா மற்றும் நடாலி ஒரே நேரத்தில் பிறந்த மூன்று சகோதரிகளை மணந்தார்.
அங்குள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக சுதந்திரம் உள்ளது என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. லுவிசோவின் குடும்பத்தினர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.
மூன்று பேரை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பியபோது, “அவர்கள் சகோதரிகள் என்பதால் நான் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது எளிதான முடிவு அல்ல, ஏனென்றால் நான் என்ன செய்கிறேன் என்று என் பெற்றோருக்கு இது வரை புரியவில்லை” என்று கூறினார்.
மேலும், “இன்னொன்றைப் பெறுவதற்கு ஒன்றை இழக்க வேண்டும். கூடுதலாக, ஒருவருக்கு அவரவர் விருப்பங்கள் மற்றும் விஷயங்களைச் செய்வதற்கான சொந்த வழி உள்ளது. அதனால் மற்றவர்கள் என்ன நினைத்தாலும் மூன்று பேரை திருமணம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெற்றோர் என் முடிவை வெறுத்தார்கள் அதனால் தான் அவர்கள் என் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காதலுக்கு எல்லை இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்.
நடாலியின் மற்ற இரண்டு சகோதரிகளை சந்திப்பதற்கு முன்பு, தான் முதலில் நடாலியை காதலித்தேன். இருப்பினும், நடாலி தனது இரட்டை சகோதரிகளான நடேஜ் மற்றும் நடாஷாவிடம் அறிமுகப்படுத்தியபோது, அவர்கள் இருவரும் என்னை காதலித்தனர். மூன்று பேரும் காதலித்ததால் அவர்களை திருமணம் செய்தேன்” என்று கூறினார்.
மூன்று சகோதரிகளில் ஒருவர், தாங்கள் சிறுவயதில் இருந்தே அனைத்தையும் பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் கணவனைப் பகிர்ந்துகொள்வது தங்களுக்கு கடினமான தேர்வாக இருக்கவில்லை என்றும் கூறினார்.