காதலியை அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்: காதலியின் முன்னாள் கணவன் யார் தெரியுமா?
67 வயதில் தனது காதலை உறுதி செய்துக்கொண்டு காதலியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் Microsoft நிறுவன தலைவர் பில் கேட்ஸ்.
பில் கேட்ஸ்
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான Microsoft நிறுவன தலைவர் தான் பில் கேட்ஸ். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து பெற்றிருந்தார்.
இந்நிலையில் பில்கேட் தற்போது புதிய காதலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது அனைவராலும் பேசப்பட்டது.
மேலும் இவர்கள் கடந்த 1 ஆண்டாக ஒன்றாக வாழ்ந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளனது.
பவுலா ஹர்ட்
பல ஆண்டுகளாக பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட் இருவரும் டேட் செய்வதாக பல செய்திகள் எழுந்திருந்தன.
இந்நிலையில் இந்த செய்தியை உறுதி செய்யும் முகமாக இருவரும் ஒன்றாக பல பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்திருக்கின்றனர்.
இதில் பில்கேட்ஸ் காதலிக்கும் பவுலா ஹர்ட்(60). இவர் Oracle நிறுவனத்தின் தலைவர் மார்க் ஹெர்ட் அவர்களின் மனைவியாவார். மேலும், இவர் கடந்த 2019ஆம் ஆண்டு புற்று நோயால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரின் இறுதிச்சடங்கில் தான் இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர். அதற்குப்பிறகு தான் இருவரும் அடிக்கடி தந்தித்துக் கொண்டிருந்தார்.