வனிதா அக்காவிடம் தான் உதவி கேட்டேன்: இயக்குநரின் சுவாரஸ்யமான காதல் கதை
நடிகை ப்ரீத்தா விஜயகுமாருடன் காதல் மலர்ந்து கல்யாணம் வரை சென்ற சுவாரஸ்யமான காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துக்கொள்வது புதிதல்ல. ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட்டாலே அடுத்த படத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
ஆனால் திரையுலகில் இயக்குநர்களை காதலித்து திருமணம் முடிப்பதும் புதிதல்ல. தேவயாணி, ப்ரீத்தா, தற்போது நயன்தாரா என தொடர்ந்துக் கொண்டுதான் செல்கிறது.
அந்தவகையில் இன்று நாங்கள் ப்ரீத்தா-ஹரியின் காதல் கதைதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
நடிகை ப்ரீத்தா - ஹரி காதல்
ப்ரீத்தா விஜயகுமார் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் முதன்முதலில் 1998ஆம் ஆண்டு தெலுக்கு திரைப்படமொன்றில் தான் அறிமுகமானார்.
இவர் தமிழ் திரைப்படங்களை விட தெலுங்கில் மிகப் பிரபலமாக இருந்தார். தெலுங்குப் படங்களில் மாத்திரம் நடித்து வந்துக்கொண்டிருந்த இவர் காலப்போக்கில் கன்னட மற்றும் மலையாள படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இவ்வாறு நேரமே இல்லாமல் நடித்துக் கொண்டிருந்த வேளையில் தான் இயக்குநர் ஹரியை சந்தித்திருக்கிறார். பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு நல்ல நண்பர்களானார்கள். நல்ல நட்பாக இருந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
வனிதாவை சந்தித்த ஹரி
இவர்களின் காதல் பற்றி வீட்டில் சொல்ல பயந்துக் கொண்டிருந்த வேளையில், ஹரி வனிதாவைச் சந்தித்து உங்கள் தங்கையை நான் விரும்புகிறேன்.
எங்களுடைய திருமணத்திற்கு நீங்கள் வீட்டில் சொல்லி எங்களுக்கு உதவ வேண்டும் என ஹரி வனிதாவிடம் கூறியிருக்கிறார்.
ப்ரீத்தா - ஹரி திருமணம்
இருவரின் காதல் பற்றி வீட்டில் சம்மதம் கேட்க விஜயகுமார் மறுத்துள்ளார்.
வனிதாவும் ஏனைய குடும்பத்தினரும் ஹரியைப்பற்றி சொல்லி திருமணத்திற்கு ஒகே சொல்லும்படி சமாதானம் செய்துள்ளனர்.
ஒருவழியாக பெரிய போராட்டங்களுக்குப்பிறகு இருவரின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் நடிப்பிலிருந்து விலகினார் ப்ரீத்தா, ஆனால் ஹரிக்கு அடுத்த அடுத்த படங்கள் எல்லாம் வெற்றிப்படங்காக மாறி வெற்றி இயக்குனரானார்.
மேலும், ப்ரீத்தா - ஹரி இருவருக்கும் திருமணமாகி, அழகான மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் இவர்களுடன் தற்போது இவர்களின் வாழ்க்கைப் பயணம் அழகாக சென்றுக் கொண்டிருக்கின்றது.