உங்களுக்கு 30 வயது ஆகிடுச்சா? அப்போ இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடவே கூடாது
பொதுவாகவே நாம் சிறியவர்களாக இருந்து பெரியவர்களாக வளர வளர எமக்கென்று ஆரோக்கியமான உணவுகளைக் நம் பெற்றோர் கொடுத்திருப்பார்கள்.
அதுபோல நமது வயது கொஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க எமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக உடல் வலி, மூட்டு வலி, உடற் சோர்வு போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும் அப்படி நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையும் போது சில உணவுகளைத் தவிர்த்திட வேண்டும் என்று சொல்வார்கள்.
அப்படி 30 வயதுக்குப்பிறகு சில உணவுகளைத் தவிர்த்தால் ஆரோக்கியம் சிறக்குமாம்.
தவிர்க்க வேண்டியவை
பொதுவாகவே எல்லோருக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான். ஆனால் இதை 30 வயதிற்குப் பிறகு சாப்பிடக் கூடாது.
ஏனெனில் இந்த சிப்ஸை தயாரிப்பதற்கு பல செயற்கைப் பொருட்கள் சேர்ப்படுகிறது. மேலும், இதில் சோடியம் சேர்ப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
தயிர் சாப்பிடுவதானால் வெயில் காலங்களில் உணவு செரிமானத்தை சீராக்கும், மேலும் உடல் சூட்டைத் தவிர்த்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
இப்படி தயிரில் பல நன்மைகள் இருந்தாலும் இதை 30 வயதிற்குப்பிறகு சாப்பிடக் கூடாது, ஏனெனில் தயிரில் சக்கரை கலந்த ஒரு சுவை இருக்கும் இந்த சுவை உங்களுக்கு வேண்டாம் மீறி உட்கொண்டால் சக்கரை நோய் மற்றும் அதிக உடல் எடையும் ஏற்படும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் போலவே பார்ப்கோர்னும் எல்லோருக்கும் பிடித்தமானது தான். வீடுகளில் தயாரிக்கும் பாப்கோர்ன் தான் ஆரோக்கியமானது.
ஆனால் கடைகளில் விற்பதை வாங்கி சாப்பிட்டால் பார்ப்கோர்னில் சேர்க்கப்படும் உப்பும் நிறைவில்லாத கொழுப்பும் கொலஸ்ட்ரோலைக் கொடுத்துவிடும்.