ஆசை ஆசையாக உருளை கிழங்கு சிப்ஸ் ஓடர் செய்த நபர்! பாக்கெட்டை திறந்த பிறகு காத்திருந்த விசித்திரம்
உருளைக்கிழங்கு சிப்ஸ் ஓடர் செய்து வாங்கிய நபருக்கு அதில் பச்சை உருளைக்கிழங்கு இருந்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பொதுவாக சிப்ஸ் பாக்கெட்டில் சூப்பர் ஹீரோவின் பொம்மை அல்லது ஸ்டிக்கர் இருந்தால் குழந்தைகளை எளிதாகக் கவர முடியும்.
ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், சிப்சுக்கு பதிலாக பாதி தோல் உரிக்கப்பட்ட பச்சையான உருளைக்கிழங்கு காணப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியரான Dr. டேவிஸ் போய்ஸ் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், சிப்ஸுக்கு பதிலாக பச்சையான முழு உருளைக்கிழங்கு இருந்ததைப் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதை உடனே புகைப்படம் எடுத்து அந்த படத்தை தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்தார். அவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் தனது பதிவில், "நான் ஒரு பாக்கெட் கெட்டில் சிப்ஸ் UK வாங்கி பிரித்து பார்த்த போது, அதில் கிரிஸ்ப்ஸ் எதுவும் இல்லை. ஒரு முழு உருளை மட்டும் தான் இருந்தது" என்று கேப்ஷனில் தெரிவித்திருந்தார்.
போய்ஸ் பகிர்ந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, இவர் வாங்கியது பகெட்டில் சிப்ஸ் யுகே வின் செடார் மற்றும் சிவப்பு ஆனியன் சுவையூட்டப்பட்ட சிப்ஸ் என்பதை அறிய முடிகிறது. இந்த பகிரப்பட்ட சிறிது நேரத்திலேயே சமூகவலைத்தளங்களில் 500க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது.
பகெட்டில் சிப்ஸ் நிறுவனமும் இவரை உடனடியாக தொடர்பு கொண்டது. "உருளைக்கிழங்கு எப்படி சிப்ஸ் பாக்கெட்டுக்குள் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை.
So I opened a bag of @KETTLEChipsUK today to find no crisps. Just a whole potato. ? pic.twitter.com/PGEqGMqIWF
— Dr David Boyce (@DrDavidBoyce) October 16, 2021
கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள எங்களுக்கு பிரைவேட் மெசேஜ் அனுப்ப முடியுமா?" என்று போய்ஸ் பதிவுக்கு கெட்டில் சிப்ஸ் நிறுவனம் கமென்ட் பிரிவில் கோரியிருந்தது. திருப்தியடையாத வாடிக்கையாளர் போய்ஸ், "சரி, இன்னும் அந்த உருளைக்கிழங்கு என்னிடம் தாம் இருக்கிறது.
உங்களுக்கு வேண்டுமானால் நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நடந்திருக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை" என்று பதிலளித்திருந்தார்.